பக்கங்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 22 பிப்ரவரி, 2014

GREAT TEACHER

ஆற்றை நீந்தி கடந்து பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்

கேரள மாநிலத்தில், 22 ஆண்டுகளாக ஆற்றை நீந்தி கடந்து பள்ளிக்கு சென்று வந்த, ஆசிரியரின் சிரமத்திற்கு விடை தரும் வகையில், லண்டனை சேர்ந்த டாக்டர் ஒருவர் படகு ஒன்றை பரிசளிக்க முன்வந்துள்ளார். கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி யானைக்கயம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் மாலிக். இரும்பழி
என்ற இடத்தில் உள்ள பள்ளியில், 1992ம் ஆண்டு முதல் ஆசிரியராக பணியாற்றும் மாலிக், ஆற்றை நீந்திக்கடந்து பள்ளிக்கு சென்று, கிராமப்புற மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். இந்த செய்தியை, ஊடகங்கள் வாயிலாக, லண்டன் டாக்டர் மன்சூர் ஆலம் என்பவர் கேள்விப்பட்டார். தொடர்ந்து இணையதளம் வாயிலாக, இப்பள்ளியை தொடர்பு கொண்டார்.

இந்நிலையில், திடீரென இந்தியா வந்த டாக்டர் மன்சூர் ஆலம்,70, நேற்று முன்தினம் குறிப்பிட்ட பள்ளிக்கு சென்று ஆசிரியர்கள்,மற்றும் மாணவர்களுடனும் உரையாடினார். தொடர்ந்து ஆசிரியர் மாலிக் தினமும் இரண்டு முறை நீந்தி கடக்கும் ஆற்றை பார்த்தார். ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள பைபர் படகை வாங்கி பரிசளிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி பள்ளியில் கூடுதல் வகுப்பறையும் அமைத்து தருவதாகவும், கம்ப்யூட்டர்கள் வாங்கித்தருவதாகவும் அவர் உறுதி கூறியுள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து இவர் 40 ஆண்டுகளுக்கு முன் லண்டனுக்கு சென்றுள்ளன மன்சூர் ஆலம், அங்கு 'மென்டல் ஹெல்த்தில்' டாக்டர் பட்டம் பெற்று, அங்கேயே பணியாற்றி வருகிறார். 'படகு கிடைத்தால் தனது தினசரி சிரமத்திற்கு முடிவு கிடைக்கும், மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வகுப்பு எடுக்க முடியும்', என, மாலிக் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக